அன்பு ஆசிரியர்கள் வணக்கம்.
பள்ளித் தவணை விடுமுறைக்குப் பின் நமது ஆசிரியகம் சில நடவடிக்கைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
1) சிங்கை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தினருடன் சந்திப்பு
நாள் : 16.9.2011, வெள்ளிக்கிழமை (பொது விடுமுறை-மலேசிய தினம்)
ஜோகூர் மாநிலத் தமிழாசிரியர்கள் பங்கேற்கலாம்.
தமிழ்ப் பள்ளிகள், தமிழ் கற்றல் கற்பித்தல், தமிழ் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நம்மிரு நாடுகளுக்கிடையே கலந்துரையாடித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிங்கைத் தமிழாசிரியர்களுடன் நல்லுறவை மேம்படுத்துவதற்காகவும் மேற்காணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட ஜோகூரிலிருந்து ஒரு பேருந்தும் (கட்டணம் RM60.00), தென் ஜோகூரிலிருந்து ஒரு பேருந்தும் (கட்டணம் 30.00) செல்லவிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட எண்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
திரு ஞா. வேதநாயகம் : 0137487507 (தென் ஜோகூர்)
திரு மனோகரன் : 0137744371 (வட ஜோகூர்)
எனவே, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் எதிர்வரும் 30.6.2011க்குள் தங்கள் பங்கேற்பை உறுதிசெய்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் விரைவான மறுமொழி எங்களின் தொடர் நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவும் என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.
2) போலிங் போட்டி (PERTANDINGAN BOWLING)
நாள் : 17.7.2011 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : 1) குளுவாங் பேரேட் (KLUANG PARADE)
2) ஜேபி டங்கா சிட்டி மோல் ( JB DUNGA CITY MALL)
ஆசிரியர்களிடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் மேம்படுத்த,
ஜோகூர் மாநிலத் தமிழாசிரியர்களுக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. போட்டி இரு வெவ்வேறு இடங்களில் ஆசிரியர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் : RM20.00
தொடர்புக்கு :
ஜோகூர் பாரு
குமாரி புஷ்பலதா : 0127295312
திரு சரவணநாதன் : 0102260049
குளுவாங் :
திரு செல்வராஜா இரமசாமி : 0137513585
திரு செல்வராஜூ இரத்தினசாமி : 0137714141
3) சிறுகதைப் பயிலரங்கு
விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
No comments:
Post a Comment