தமிழரின் பல்கலைக் களஞ்சியமான தொல்காப்பியத்தின் சிறப்புகள்: 1. பழந்தமிழரின் வாழ்வியல், வரலாற்று நூல். 2. பழந்தமிழ் இலக்கணம், இலக்கியம், வாழ்வியம் ஆகியவற்றைக் காட்டுகிறது. 3. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக நிலையை அறிவிப்பது. 4. உயிரியல், உளத்தியல் வாழ்வியல் கூறுவது. 5. எழுத்து, சொல், பொருள் வரலாறு தந்தது. 6. இலக்கிய, பண்பாட்டு ஆராய்ச்சி நூல். 7. இலக்கண, மொழியியல் ஆராய்ச்சிப் புதையல். 8. அகப் பொருள் புறப் பொருள் திணைப்பகுப்புடையது. 9. பண்டைய தமிழகத்தின் வடக்கு எல்லை வடவேங்கடம் (திருப்பதி) எனவும் தெற்கு எல்லை தென்குமரி எனவும் வரையறுக்கிறது. 10. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் கொள்கலம். 11. எண்ணம் சொல், செயல் இறைமை கூறும் ஏடு. 12. யாப்பிலக்கணத்தின் கருவூலம். 13. மறந்துபோன பண்டையத்தமிழ் நூல்களின் சான்றாகத் திகழ்கிறது. 14. தமிழின் வேரும் நீருமான ஐந்திறப் பனுவல். 15. தொன்னூல் கூறி வழி நூல்களுக்கு வழிவகுக்கும் பனுவல்.
No comments:
Post a Comment