Sunday, 11 September 2011

பி.எம்.ஆர். பயிலரங்கு,


கடந்த 11.9.2011ல் (ஞாயிறு), ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர்கள் கழக ஏற்பாட்டில் பி.எம்.ஆர். பயிலரங்கு, மலேசிய தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தில்   நடைபெற்றது. ஏறக்குறைய 340 மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, நிலநூல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வு உத்திகளை 6 அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் போதித்தனர். காலை மணி 8.30லிருந்து மாலை மணி 5.00 வரை நடைபெற்ற இப்பயிலரங்கில் கூலாய், ஜோகூர் பாரு, பாசீர் கூடாங் ஆகிய வட்டாரங்களிலிருந்து மாணவர்கள் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் மாணவர்களைத் திரட்டிப் பங்கெடுக்கச் செய்த பள்ளி ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். உணவு இலவசமாக வழங்கி உதவி செய்த தொழிலதிபரும், ஜோகூர் பாரு தொகுதி ம.இ.கா. தலைவருமான டத்தோ எஸ், பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், ஜோகூர் பாரு ம.இ.கா இளைஞர் பகுதித்  தலைவர் திரு ஹரிதேவன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மற்றும் நிகழ்ச்சி செம்மையாகவும் வெற்றிகரமாகவும் ந
டைபெற உதவிய ஆசிரியர்களுக்கும் தன்னார்வ மாணவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கின்றோம்.















































No comments:

Post a Comment