Monday, 30 January 2012

2012ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தமிழ் மொழி & இலக்கியப் பாடம் பற்றிய கருத்தரங்கு






கடந்த 27, 28 ஜனவ‌ரி 2012, ஆகிய இரு தினங்களில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் எஸ்.பி.எம் தமிழ் மொழி & தமிழ் இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக (இலக்கியகம்) ஆதரவுடன் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை ஏற்பாடு செய்திருந்தது. 2012ல் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் எஸ்.பி.எம் தமிழ் மொழிப் பாடப் புதியத் தேர்வுத் தாள் அமைப்பு, 2012ல் படிவம் நான்கில் அறிமுகமாகவிருக்கும் இலக்கியப் பாட மாற்றங்கள் ஆகியவை தொடர்பான விரிவான விளக்கங்களை ஆசிரியர்களுக்கு வழங்கும் பொருட்டு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்க‌ருத்தரங்கில் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் கழக ஏற்பாட்டில் 50 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஜோகூர் மாநில ஆசிரியர்கள் நீண்ட நேரம் பயணம் செய்து, தங்கள் சொந்த செலவிலலேயே  (பேருந்து, தங்கும் விடுதி) இக்கருத்தரங்கில் கலந்து சிறப்பித்த ஆர்வத்தினையும் முயற்சியினையும் கண்டு மலேசியத் தேர்வு வாரிய அதிகாரி திரு மூர்த்தி அவர்களும், ம‌லேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத் (இலக்கியகம்)தலைவர் திரு இராஜன் அவர்களும் தங்கள் உரையில் குறிப்பிட்டு பாராட்டைத் தெரிவித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதற்காக, இக்கருத்தரங்கில் கலந்து, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியகம் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறான‌ ஆர்வமும் ஒத்துழைப்பும் நீடிக்க வேண்டுமெனவும் ஆசிரியகம் கேட்டுக்கொள்கிறது.

28.1.2012ல்,  எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய இலவச பாடநூல் வெளியீடு, மீண்டும் 5,000ஐ நோக்கி இலக்கிய விழிப்புணர்வு இயக்கத்தொடக்க விழாவும் நடைபெற்றது. இவ்விழாவை மனித வள அமைச்சரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் சிறப்புரையாற்றி தொடக்கிவைத்தார். ஆசிரியர்களுக்கு இலவயமாக இலக்கியப் பாட நூல்களும் வழங்கப்பட்டன.


தொடர்ந்து, 2012ல் படிவம் நான்கில் இலக்கியப் பாடம் எடுக்கவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக இலக்கியப் பாட நூல்கள் விரைவில்  வழங்கப்படவிருப்பதாகவும் இலக்கியக‌ ஆலோசக‌ர் திரு மூர்த்தி அவர்கள் அறிவித்தது அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்பான செய்தியாக அமைந்தது.  

மேற்கன்ட இரு நாள்களில், நிகழ்ச்சி எல்லா வகையிலும் மன நிறைவு அளித்த உவகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் உள்ளக்களிப்போடும் உற்சாகத்தோடும் இலக்கிய மாணவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வேட்கையுடனும் தீர்மான‌த்துடனும் விடைபெற்றுச் என்றனர்.































நன்றி இலக்கியகம்!

No comments:

Post a Comment