கடந்த 12.11.2011, 13.11.2011 ஆகிய இரு நாள்களில் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர்கள் கழகம், மலாக்கா, கோலாலம்பூர் ஆன்மீகச் சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. பி.எம்.ஆர் மாணவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சுற்றுலாவில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் திரு மனோகரன், திரு வேதநாயகம், திரு ஆனந்தன், திரு குணசேகரன், திரு அறிவழகன், திருமதி ஜெயந்தி ராணி, திருமதி சின்னதாய், திருமதி மலர்க்கொடி, குமாரி விலாசினி ஆகிய 9 ஆசிரியர்கள் பயணத்தில் மாணவர்களுக்கு உதவியாகப் பயணம் செய்தனர்.
முதலில் மலாக்காவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு ஆசிரியர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் சமயச்சொற்பொழிவு நடைபெற்றது.
சமய உரை ஆற்றிய ஆசிரியர் திரு இரவிச்சந்திரன் அவர்களுக்கு மாணவி சன்மதி நினவுச்சின்னம் வழங்குகிறார்.
அங்குப் பகல் உணவை முடித்த பின் மாணவர்கள் மலாக்காவில் உள்ள ஆபாமோசாக் கோட்டையைச் சுற்றிப் பார்த்தனர்
மலாக்கா ஆபாமோசாக் கோட்டை உலா
மாலை மணி 6.00க்குக் கிள்ளானில் உள்ள தாமான் ஸ்ரீஅன்டாலாஸ் மாரியம்மன் ஆலயத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களின் சமய உரை நடைபெற்றது.
காப்பாரில் இரவு உணவு
மறுநாள் ஆதிசங்கரர் மடத்தில் சங்கரர் குருதாசர் சுவாமி மகேந்திர குருக்கள் அவர்களும் ராஜாஜி குருக்கள் அவர்களும் சமய உரை ஆற்றினர்.
நண்பகல் மணி 12.00 க்கு மாணவர்கள் மிருகக்காட்சிச்சாலைக்குச் சென்றனர்.
பிற்பகல் மணி 2.00க்குப் பத்துமலை உலா
மாலை மணி 5.00க்கு மக்கள் ஓசை அலுவலகத்திற்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மக்கள் ஓசை ஆசிரியர் கனிவான உபசரிப்பும் விரிவான விளக்கமும் அளித்தார்.
மாலை மணி 5.00க்கு மக்கள் ஓசை அலுவலகத்திற்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு மக்கள் ஓசை ஆசிரியர் கனிவான உபசரிப்பும் விரிவான விளக்கமும் அளித்தார்.பல தகவல்களைப் பெற்ற மகிழ்வுடன் அங்கிருந்து புறப்பட்டு இரவு மணி 8.00க்குச் சிரம்பானில் உள்ள தண்டாயுதபாணி ஆலயத்திற்கு மாணவர்கள் வருகை புரிந்தனர். அங்கு இரவு உணவை முடித்துக்கொண்டு இரவு மணி 9.30க்குச் சிரம்பானை விட்டு பேருந்து புறப்பட்டது.
இவ்வேளையில் பயணம் வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைவருக்கும் ஆசிரியகம் மனமார்ந்த நன்றியை நவில்கின்றது.
பிரதமர் துறை துணை அமைச்சர் மாண்புமிகு தேவமணி அவர்கள்
ஜோகூர் மாநில ம.இ.கா. துணைத்தலைவர் மாண்புமிகு M.M சாமி அவர்கள்
மாண்புமிகு வித்தியானந்தன் அவர்கள்
சங்கரர் குருதாசர் சுவாமி மகேந்திர குருக்கள்
ராஜாஜி குருக்கள்
பாஸ்கரன் குருக்கள் & மலாக்கா முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர்,
டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள்
திரு பாலன் அவர்கள் & காப்பார் சுப்ரமணிய ஆலய நிர்வாகத்தினர்
திரு சுந்தரம் அவர்கள் & சிரம்பான் பாலதண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தினர்,
மக்கள் ஓசை ஆசிரியர் திரு இராஜேந்திரன் அவர்கள்
2003 எச் ஜே எம் முன்னாள் மாணவர்கள்
குத்தகையாளர் திரு கணேசன் அவர்கள்
திரு இரவிச்சந்திரன் (மலாக்கா) அவர்கள்
மற்றும் உதவிகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்...
No comments:
Post a Comment