Tuesday, 12 October 2010

ஜோ.மா.தே.இ.த. கழகத்தின் தலைவரின் எண்ணச்சிறகுகள்

வணக்கம். இந்த வலைப்பூவின் வழி ஆசிரியப் பெருந்தகையினரைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எனது தலைமையிலும் ஆசிரியகத்தின் செயலவை உறுப்பினர்களின் ஆதரவிலும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உங்களின் வற்றாத ஆதரவை எதிர்ப்பார்க்கிறோம். தனிமரம் தோப்பாகாது என்பர்.  நமது கழகமும் தனி முத்திரை பதிக்க வேண்டுமெனில் ஒற்றுமை ஒன்றே மந்திரக்கோல்.  வானவில்லின் ஏழு வர்ணங்களும் ஒன்று சேர்ந்ததினால்தான் வானுக்குச் சிறப்பு. அதுபோல, கருத்துகளால் வேறுபட்டாலும்  ஒற்றுமையாகச் செயல்பட்டால்தான் கழகத்திற்குப் பெருமை.

    வெற்றியின்போது பாராட்டும் பத்து விரல்களைவிட  தோல்வியின்போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரல் உயர்வானது. அந்த ஒரு விரலாக அனைவரும் இருப்பீர்கள் என நம்புகிறேன். அதோடு,  கழகம் இன்னும் சிறப்பாகச் செயல்பட உங்களின் கருத்தினை மிகவும் வரவேற்கிறோம்.  வாழ்க!

" உறங்குகிறவனுக்கு உதயத்தின் அழகு தெரிவதில்லை"

அன்பன்
மனோகரன் 
தலைவர்,
ஜோ.மா.தே.இ.த. கழகம் (ஆசிரியகம்)

No comments:

Post a Comment