வணக்கம். கடந்த 16.9.2011 (வெள்ளி), ஜோகூர் மாநிலத் தேசிய இடை நிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் கழகம் (38 ஆசிரியர்கள்) சிங்கப்பூருக்குச் சுற்றுலாவை மேற்கொண்டது. இச்சுற்றுலாவில் 38 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேருந்து காலை மணி 6.00க்குக் குளுவாங்கிலிருந்து புறப்பட்டுப் பின்னர் காலை மணி 8.30க்குத் தென் ஜோகூரில் உள்ள ஆசியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. நண்பகல் மணி 12.00 அளவில் சிங்கப்பூரிலுள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தை அடைந்தோம். அங்குக் கனிவான அன்பான வரவேற்புடன் விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியினை ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் குத்து விளக்கேற்றி அதிகாரமாகத் துவக்கி வைத்தார். பின்னர் அந்நிலையத்தின் மேற்பார்வையாளர் திரு ஜெயராஜதாஸ் பாண்டியன் அவர்கள் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் தொடர்பான விளக்கத்தினை அளித்தார். பின்னர் இரு வழி கலந்துரையாடல் நடைபெற்றது.
மாலை மணி 5.00 அளவில் சிங்கப்பூர்த் தேசிய (அங் மொ கியோ) நூல் நிலையத்தில் திருமதி மீனாட்சி சபாபதியுடன் சந்திப்பு நடைபெற்றது. அதனித் தொடர்ந்து இரவு மணி 7.30 அளவில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் கழக மாளிகையில் சிங்கப்பூர் ஆசிரியர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. தலைவர் திரு சாமிக்கண்ணு அவர்கள் கழகம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இரவு மணி 10.00 அளவில் பேருந்து சிங்கப்பூரை விட்டுப்புறப்பட்டது
மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும்புறப்படும் ஆசிரியர்கள்
எங்கே இருக்கிறது இந்த உமறுப்புலவர் தமிழ் நிலையம்???
இதோ! உமறுப்புலவர் தமிழ் நிலையம்!
முதலில் உணவு! பிறகு தான் மற்றவை!
உமறுப்புலவர் நிலயத்தினருடன் உரையாடல்!
கல்வி அமைச்சு அதிகாரியுடன் ...
தமிழ் நிலைய நூல்நிலையத்தில்..
ஆய்வுப் பணியோ!
மாணவருடன் சந்திப்பு!
நிலை பெற நீ வாழியவே!!!
மீண்டும் சந்திப்போம்!!! நன்றி!!!
திருமதி மீனாட்சி சபாபதி அவர்களை உரையாற்ற அன்புடன் அழைக்கிறேன்
ஆர்வமோ? திகைப்போ?
களைப்பிலும் திளைப்பு...
கனிந்த உபசரிப்புக்கு...நட்பு நீடிக்க... நினைவுப்பரிசு...
சங்க அறிமுகம்...
அறிந்து கொள்ளும் ஆர்வம்...மிகுந்த உன்னிப்பு..
நாள் முழுதும் பயணம்...களைப்பு...இருந்தும்..
மன நிறைவு..
No comments:
Post a Comment