Friday, 19 November 2010

அரசாங்க ஊழியர் ஊதிய‌ அறிக்கை (Penyata Gaji)

அரசாங்க ஊழியர் ஊதிய‌ அறிக்கை
(Penyata Gaji Kakitangan Kerajaan)

நவம்பர் 2010 முதல் அரசாங்க ஊழியர் அறிக்கை அரசாங்க ஊழியர்களுக்கு அனுப்பப்படாது. மாறாக அரசாங்க ஊழியர்கள் இணையத்தின் வாயிலாக கீழ்க்காணும் அகப்பக்கம் வழி அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

http://www.anm.gov.my


அதற்கான வழிகள்:

1. மேற்காணும் அகப்பக்கத்திற்குச் சென்று Perkhidmatan Online  என்ற பகுதியில்   e - penyata Gaji & Laporan என்பதைச் சொடுக்க வேண்டும்.

2. Akses sistem என்ப‌தைச் சொடுக்க‌ வேண்டும்

3. அடையாள‌ அட்டை எண்ணையும் க‌ட‌வுச் சொல்லையும் ப‌திவு செய்ய‌      வேண்டும்.

4. Pertama Kali Mendaftar என்பதைச் சொடுக்க வேண்டும்.

5. சுய‌ விவ‌ர‌ங்க‌ளைப் ப‌திக்க‌ வேண்டும்

6. Daftar Masuk  என்பதைச் சொடுக்க‌ வேண்டும்

7. வேண்டிய‌ மாத‌த்தைப் பூர்த்தி செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ள‌லாம்.


இத்த‌க‌வ‌லுக்கான‌ சுற்ற‌றிக்கையைக் கீழ்க்காணும் அக‌ப்பக்‌க‌ம் வ‌ழி  பெற்றுக்கொ‌ள்ள‌லாம்.


http://www.anm.gov.my/public_html/pek/pek32010.pdf

No comments:

Post a Comment