Monday 25 October 2010

சிந்திப்போமே!

கடந்த அக்டோபர் 15,16,17ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் கம்பன் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நம் ஜோகூர் மாநிலத் தமிழாசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அவ்விழா பொதுவாக சிறப்பாக நடைபெற்றதாக கலந்துகொண்டோரில் சிலர் கூறினர். கம்பன் தமிழிலக்கியத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்ற பழமொழியே இதற்குச் சான்று. எனினும், இலக்கிய, ஆன்மிக  வளர்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம்  இலக்கண, மொழியியல்  வளர்ச்சிக்கும்  கொடுக்கலாமே.  கம்பன்விழா, வள்ளலார் மாநாடு, சித்தர் மாநாடு போன்றவற்றின் வரிசையில், தமிழ் இலக்கணம் படைத்தளித்துப் பிற மொழிகளுக்கு "இலக்கணமாகத்" திகழச் செய்துள்ள தொல்காப்பியருக்கும் ஒரு விழா அல்லது தொல்காப்பியம் பற்றிய மாநாட்டை நடத்தலாமே!  சிந்திப்போமே?

ஆசிரியகம்.

No comments:

Post a Comment